எப்போது பாசம் பிறக்கிறது
மணத்திற்கு பின் |
கருவறையில் உயிரின் ஆரம்பம்-என |
மருத்தவரின் சொல் |
கேளும் போதா? |
பக்குவமாய் |
தடவும் போது இரண்டு |
கால்களால் வயிற்றை எட்டி |
உதைக்கும் போதா? |
தாயின் |
முகத்தை பார்க்க வீறுகொண்டு |
வாயைப் பிளந்து வந்து |
அழும் போதா? |
முயற்சியால் |
பற்கள் முளைக்கா வாயில் |
மழலைச் சொற்களின் ஒலி |
விழும் போதா? |
முதல்வகுப்பில் |
அறிவைப்பிளந்து பெற்ற |
மதிப்பெண் அட்டவணையை |
நீட்டும் போதா? |
சான்றோர் |
முன்னிலையில் யாவரும் போற்ற |
வென்ற பட்டத்தை தாயின் தலையில் |
அணியும் போதா? |
ஆண்டுகள் பல |
உடனிருந்தும் அறிவைப்பெருக்க |
வெளிநாடு செல்கையில் |
வழியனுப்பும் போதா? |
வருவானென்று |
கடிகாரத்தின் எதிரியாய் காலண்டரிடம் |
போரிட்டு வழித்தடத்தின் சத்தத்தை |
உணரும் போதா? |
மனைவியின் |
சொல்கேட்டு ஆடினாலும்-அவனின் |
விழிகளில் ஒருசொட்டு கண்ணீர்கூட எதிர்பாராமல் |
நிற்கும் போதா? |
முதியோர் |
இல்லம் சென்றாலும் |
கொள்ளிவைக்க வருவானா-என |
ஏங்கும் போதா? |
செ.தினேஷ்குமார் |
No comments:
Post a Comment