Saturday, September 29, 2018

அம்மா & மகன்


அம்மா
   
  வாயிலில் நுழையும் போதே
  வாய்நிறைய சொல்லிய வார்த்தைகள் எங்கே?
   
  மாளிகைவேண்டாம் உந்தன் மடிதனில்
  உரக்கம் போதுமே என்ற மனது எங்கே?
   
  பணியிடையில் இன்னிசைபேசியில் இட்ட
  அன்புக் கட்டளைகள எங்கே?
   
  துகிலும் போதும் முந்தானை வாயில்
  உளறிய உளறல்கள் எங்கே?
   
  அவசரஅவசரமாய் செல்லும் போதும்
  நிதான அழைப்பு எங்கே?
   
மகன்
   
  தாயின் அன்பை இழந்தவளுக்கு
  தாயானேன்
   
  உலகம் அறியா உலகிற்கு
  தந்தையானேன்
   
  ஓடிஓடி களைத்துப்போன உனக்கு
  ஓடாத சொத்தானேன்
   
  கருவறையில் இடமளித்த உனக்கு-என்
  மன அறையில் இடமளித்தேன்
   
  மணவறையில் இடம் கொடுத்தவளுக்கு-என்
  கருவறையில் இடம் கொடுத்தேன்
   
   
 
  செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment