Saturday, September 29, 2018

அழகு நிலா


அழகு நிலா
 
 
  பின்னிய கூந்தலில் அழகு நிலா வீற்றிருக்க  
  வண்ணமீன்கள் இரண்டும் விளையாட  
  செவ்விதழ் வாயில் கருநீல வெட்டுக்கள் பூத்திருக்க  
  மங்கையொருத்தி என்னைத் தொட்டாள்  
 
 
  நானும் பூவென நினைத்து இதழ்லோடு இதழ்சேர  
  நாவினுள் தேன்சுவையோடு கண்கள் இரண்டும் இமைதழுவ  
  உலகமே பூவாய் மாறியது அவளும் நிலவானாள்  
  நானும் சென்றேன் அவளுடன்  
 
 
  பன்னீர் தெளித்து பூத்தூவி வரவேற்க  
  காற்றசைவில் ஆடும் பொன்னூஞ்சலில்  
  பணிப்பெண் தோழிகள்  
  அமரச்செய்தனர்  
 
 
  என் காதின் இதழ்களை ஏழுஸ்வரங்களும் தழுவ  
  காற்றில் அசையும் கொடிபோல நான்திரும்ப  
  தோகை விரித்தாடும் அழகுமயில் தோற்க  
  தேவதையொருத்தி நடந்துவரக் கண்டேன்  
 
 
  நானும் இமைகள் மூடாமல் அவளை ரசிக்க  
  காதல் பார்வையால் என் உடல்முழுவதையும்  
  ஒரு நொடிப்பொழுதில் மௌனமாக்கினாள்  
  என் இருகரங்களின் அவளை அனைக்கும் போது...............  
 
 
  காலைச்சூரியன் கண்களில் விழ  
  சட்டென்று விழித்தேன்  
  கனவென  
  உணர்ந்தேன்.........................  
 
 
 
 
  செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment