Saturday, September 29, 2018

மகனின் காணிக்கை


மகனின் காணிக்கை
 






 
  அழுகுரல் கேட்டவுடன் ஆனந்தம்


 
  பிறந்ததென்று அழுதவளே!


 
 






 
  அடுக்கடுக்காய் அடிவாங்கி



 
  ஒருபிடியாய் வளர்த்தவளே!


 
 






 
  களைபிடிங்கிய ஊதியத்தில் ஊரின்


 
  களைபிடுங்க அனுப்பியவளே!


 
 






 
  உருவம் இல்லா உயிருக்கு


 
  உருவம் கொடுத்தவளே!



 
 






 
  உள்ளத்தில் வைத்து



 
  உள்ளங்கையில் வளர்த்தவளே!


 
 






 
  உருகும் மெழுகுவர்த்தியில் வெளிச்சம் வரவில்லை
 
  உன் உருவம் தெரிகிறது.



 
 






 
  கடலிலே போடும் கடுகுதான்-என்


 
  காணிக்கை ஊராரின் மனச்சொற்கள்.

 
 






 


  செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment