ஒரு முறை சொல்லிவிடு | ||
விடியற்காலையில் | ||
பாமாலை பாடும் பூமாலையே | ||
பூஞ்சோலைத் தென்றல் வீதியில் | ||
சலங்கைச் சத்தம் கீதம்பாடும் | ||
பொற்பாதம் பதியும் தரையாவேனோ! | ||
துகில்கையிலும் | ||
நிமிடம் பிரியா காதலிக்கும் | ||
அலைகளின் ஒலியில கவிபாடும் | ||
இமையத்தையே இருளாக்கும் | ||
களைப்பின்றி சாமரம் வீசும் இமையாவேனோ! | ||
உணர்கையில் | ||
இலைகளின் இடையில் தவிக்கும் | ||
ஈரேழு உலகமே விரும்பும் | ||
அனுமதியின்றி இதயம் செல்லும் | ||
முகமில்லா மூச்சுக்காற்றாவேனோ! | ||
உதிரும் பூக்கள் 'ஓ' என்று அழுதது | ||
மதிப்பவர் இல்லா உலகம் பிறந்திடும்மென்று | ||
தூக்கம் மறந்தது துடிக்கும் இதயம் | ||
நினைவில்லா நிலையானது | ||
உந்தன் புன்னகையால்............. | ||
வெண்மதியின் நேரம் தவிர்ந்தது | ||
கதிரவன் பிறப்பால் விண்ணுலகம் இரண்டானது | ||
உலகம் மறந்து உயர்ந்து நிற்கும் | ||
கற்சிலையும் எழுந்து நடந்தது- பொற்சிலையே | ||
உந்தன் பார்வையால்............. | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
ஒரு முறை சொல்லிவிடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment