Saturday, September 29, 2018

தெரியவில்லையே

தெரியவில்லையே


ஏய் இளைஞனே
ரோஜாவின் மீது ஆடும் உனக்கு
முள்ளின் மீது நடக்கும் எங்களின்
வலி-தெரியவில்லையே!

அப்பன் பணமும் தாத்தன் சொத்தும்
இருக்கும் உனக்கு
அன்றாடம் காய்ச்சிகளின்
வறுமை -தெரியவில்லையே!

காலை ஒருவை மதியம் ஒருவகை
சாப்பிடும் உனக்கு
காலையும் மதியமும் கூழ்குடிக்கும் எங்களின்
நிலைமை-தெரியவில்லையே!

உன் வண்டிக்கு ஊற்றும் பெட்ரோலை
எரிவாயு ஆக்கி இருந்தால்
எத்தனை வீட்டின் அடுப்பு எரியும் என்பதன்
வலிமை-தெரியவில்லையே!

நீ குடிக்கும்
பீரின் அளவுகூட நாங்கள்
கஞ்சி குடிப்பதில்லை என்பதன்
வேதனை-தெரியவில்லையே!

சம்பாதித்து தான் சாப்பிடவேண்டும் என்றால்
ஏழையும் பணக்காரன் தான்
அனைவரும் அப்துல்கலாம் தான்
என்பது-தெரியவில்லையே!


                                                  செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment