உழாமல் விழாமல்-தானியம் |
முளைத்தது உண்டோ? |
நெய்யாமல் தைக்காமல்-துணி |
போட்டது உண்டோ? |
தோண்டாமல் கட்டாமல்-எங்கும் |
வாழ்ந்தது உண்டோ? |
உழைக்காமல் முயலாமல்-வெற்றி |
பெற்றது உண்டோ ? |
வெட்டாமல் செதுக்காமல்-சிலை |
உருவானது உண்டோ? |
தட்டாமல் சுடாமல்- பானை |
செய்தது உண்டோ? |
அடிக்காமல் மிதிக்காமல்-நெல்மணி |
வந்தது உண்டோ? |
தாய்தந்தை சொல்கேளாமல்-பிள்ளை |
முன்னேறியது உண்டோ? |
இமைக்காமல் துடிக்காமல்-உயிர் |
வாழ்ந்தது உண்டோ? |
காற்று வீசாமல் நீர்ஊற்றாமல்-மரம் |
வளர்ந்தது உண்டோ? |
சூரியன் எழாமல் விழாமல்-இரவு |
வந்தது உண்டோ? |
தாய்தந்தை திட்டாமல் அடிக்காமல்-மகன் |
சாதித்தது உண்டோ? |
இருளில்லாமல்-ஒளி |
வந்தது உண்டோ? |
துன்பம் இல்லாமல்-இன்பம் |
கிடைத்தது உண்டோ? |
தோல்வி அடையாமல்-வெற்றி |
கிடைத்த்தது உண்டோ? |
தாய்தந்தை இல்லாமல்-பிள்ளை |
பிறந்தது உண்டோ? |
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
இல்லாமல் உண்டோ?
இல்லாமல் உண்டோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment