Saturday, September 29, 2018

அம்மா


அம்மா
   
  பக்கத்தில் இருக்கையில் பக்குவப்படாத நெஞ்சம்-இன்று
  தூரத்தில் துன்பப்படுகிறது.
   
  உணவில் சுவைதேடி புண்படுத்திய நாக்கு-இன்று
  உணவைத்தேடி புண்படுகிறது.
   
  தட்டைத்தூக்க நீட்டிய கைகள்-இன்று
  தட்டை தூக்கிக்கொன்டு அலைகிறது.
   
  இருக்கையில் நினைக்கவில்லை
  நினைக்கையில் நீ இல்லை......................
   
 
  செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment