மங்கையின் அழைப்பு | ||||||||
வெண்நிலவொன்று கண்ணசைத்து அழைக்க | ||||||||
ஆழ்ந்த சிந்தனையில் இருந்த நான் எழ | ||||||||
வீணையின் நாண்கள் போன்ற விரல்கள் காற்றிலே தவிழ | ||||||||
செந்தாமரையின் இதழ்களான உதடுகள் அழைத்தது. | ||||||||
மெல்ல மெய்மறந்து இமைகள் மூட | ||||||||
நாணின் கரம் பற்றிச் செல்ல | ||||||||
வழி ஒன்று பிறந்தது | ||||||||
வாயில் ஒன்று திறந்தது. | ||||||||
இமைகள் இதழ்தழுவி திறக்க | ||||||||
இன்னிசை ஒலிகளால் செவிகள் குளிர | ||||||||
பார்க்கும் இடமெல்லாம் மலர்தூவி நிற்க | ||||||||
மணக்கும் மலராய் ஒளிரும் ஒளியாய்- | ||||||||
மலர்ந்தது ஒர் மங்கை. | ||||||||
இமைப்பொழுதில் கரம் பிடித்தது | ||||||||
நாடிநரம்புகள் சிலிர்த்தது | ||||||||
உடலின் இரத்தம் கூட ஓரு நிமிடம் நின்றது | ||||||||
தாயின் அன்பும் தந்தை ஞானமும் | ||||||||
நண்பனின் ஆற்றலும் ஒரு சேர கிடைத்தது. | ||||||||
கடலலை பஞ்சுபபோல கூட்டிச்செல்ல | ||||||||
காலடி சத்தம் செவிமகிழ | ||||||||
காற்றிலே மெல்லிய கூந்தல் முகத்தினை தழுவ | ||||||||
தூரத்தில் தெரிந்தது ஒரு பொன்னூஞ்சல். | ||||||||
கற்களும் சிரிக்குமோ இரும்புச்சங்கிலியும் இசைக்குமோ | ||||||||
பூக்களும் பாய்விரிக்குமோ-என்று | ||||||||
எண்ணிய கணததில் அனைத்தும் சொந்தமானது. | ||||||||
பக்கத்தில் அமர்ந்து பாலூட்ட | ||||||||
பக்குவமாய் கனி இழைக்க | ||||||||
என் இதழ்களோ அதை சுவைக்க | ||||||||
மனதோ உருவக்கனிகையை தேடியது. | ||||||||
பொன்னூஞ்சல் மெல்லிய காற்றிலே ஆட | ||||||||
நாண்களோ என் தலை வருட | ||||||||
வெண்தாமரை இதழ்களோ என் இதழ்களை நோக்கி வர.......... | ||||||||
படார் என்று திறந்தது கதவு, தெளிந்தது என் கனவு. | ||||||||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
மங்கையின் அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment