உழவர் திருநாள்
காட்டிலும் மேட்டிலும் உழைத்து களைத்து
உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள்
உண்ண உணவும் உடுத்த உடையும் தந்த
உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள்
காலம் முழுதும் விடுப்பின்றி உழைத்த
உழவனுக்காக ஒருநாள் இந்த திருநாள்
மண்ணுடன் மண்னாய் மக்கும் வரையிலும்
மண்வாசனை மாறாமல் காக்கும் எந்தன் உழவன்
குழந்தையாய் மாறி குதூகலம் காணும்
ஒருநாள் இந்த திருநாள்
தமிழர் திருநாளாம் இந்த உழவர் திருநாள்
இன்றாவது ஆங்கிலம் விடுத்து
தமிழில் வாழ்த்துக்கள் சொல்லி
உழவனையும் தமிழையும் போற்றி காப்போம்
"இனிய உழவர் தினவாழ்த்துக்கள்"
செ.தினேஷ்குமார்
No comments:
Post a Comment