Saturday, September 29, 2018

அழகே! அழகே!


அழகே! அழகே!
 
 
  அழகே! அழகே!  
  உனைக்காண ஒரு கோடி  
  விழிகள் வேண்டும் நொடிப்பொழுதில்  
 
 
  காலைச்சூரியன் மலைநடுவில்  
  உருகா பனிவட்டம் மலைச்சுற்றில்!  
  புற்களின் நுனியில் ஒருதுளி  
  உலகம் அடங்கும் பனித்துளி!  
 
 
  குயிலின் சத்தம் மயிலின் ஆட்டம்  
  மறியல் இல்லா போராட்டம்!  
  மாசில்லா சுவாசக்காற்று  
  இதயத்தின் வேகத்தை மாற்று  
 
 
  புகுந்த வீட்டிற்கு வரும் அருவி  
  அதுதான் உழைப்பவனின் குருதி  
  கூடிவந்த ஓலைகளின் தென்னை  
  ஐந்தறிவு உயிர்களின் திண்னை  
 
 
  மனஅரசர்கள் வாழும் மனை  
  தினமும் விழும் கதிரவனின் ஏவுகணை  
  முன்புறம் போடும் மாக்கோலம்  
  மனச்சிக்கல்களைப் போக்கும் மனக் கோலம்  
 
 
  இந்திரனின் இம்சையின் இருமாப்பு  
  இளஞ்சிறு வண்டுகளின் அணிவகுப்பு  
  ஊரின் உறவைச்சொல்லும் ஆலமரம்  
  உன்னை அன்புடன் வரவேற்கும் தோரணம்  
 
 
  மண்ணில் ஏர்பிடித்ததில் பதியும் களைப்பை  
  உலகத்தவர்களுக்கு வெளிப்படுத்தும் தமிழனின் உழைப்பை  
  விருந்தோம்பலின் சிவந்துபோன கை  
  இந்நாட்டை உயர்த்தும் நம்பிக்கை  
 
 
  அன்பின் ஆழம் அறியா மக்கள்  
  கவலையின் களங்கம் அறியாதவர்கள்  
  பல துளியின் ஒருதுளி  
  நாட்டை உயர்த்து அன்பின் வழி.............  
 
 
                                                                             செ.தினேஷ்குமார்  

No comments:

Post a Comment