Saturday, September 29, 2018

அழகே................


அழகே................

இதயத்தின் பார்வை ஒரு நிமிடம்
மறந்திட துடிக்குது பல வருடம்
விழுந்தேன் நானும் உன்னிடம்
விழுகையில் பிடித்தேன் உன் மனம்

நிலாவின் ஒளியோ தீர்ந்தது - உன்
முகவரி கொடுத்தேன் கடன்வாங்க
மலரின் காம்பும் தலைவணங்கும்
உந்தன் இத‌பி‌ன் பதம்பார்த்து

அனுமதி கேட்டென் முகம் பார்க்க
உன்னையே கொடுத்தாய் துகில்கலைய்
இனியும் வேண்டாம் வெகுதூரம் - நம்
இதழ்களின் இடையில் கலவரம்

கவிஞனின் கற்பனைத்திறனும்   
சலனமாகும் காலம் - உந்தன்
மடிகளின் இடையில் - எந்தன்
தலைசாய்க்கும் நேரம்

உன் விழிகளின் வழியில் நடக்கின்றேன்
எ‌ன் இதத்துடிப்பாய் நினைக்கின்றேன்
காணும் உலகை மறக்கின்றேன்
கணவுகளால் மிதக்கின்றேன்

சொற்கள் மறந்து துடிக்கின்றேன் - உன்
பெயரை மட்டும் நொடிக்குநொடி ஒலிக்கின்ரென்
கேட்டுச் செல்லும் செவிகளின் இதழ்கலை
எந்தன் இதழ்களால் கடிக் கின்றேன்

பூக்களின் இதழ்களோ வாடுகிறது - எந்தன்
கைகளோ உன்னைத் தேடுகிறது
மூச்சுக்காற்றால் விளக்கும் அனைந்தது
கண்கள் நான்கும் தூங்க மறுக்கிறது அழகே................


செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment