Saturday, September 29, 2018

உனக்கு மட்டும் (Only for You…..)


உனக்கு மட்டும்
                                                  Only for You…..

மன்னிப்பு (பூ)
நண்பர்களுக்கிடையில் இது தேவையா?
இதுவே பாலமாகுமானால்
ஓராயிரம் பூக்கள்.........................

மங்கையின்மனதறியா கயவனை
மங்கயர் போற்றும் மாமேதையாக்கியவளே!
உயிரிழந்த கோபத்திற்கு உயிர்தந்தேன்
உயிருடன் இருந்த உன் நட்பையிழந்தேன்!

முற்களின் படுக்கையில் இருந்து
உள்ளங்கையில் உறங்க இடம்கொடுத்தாய்
உணரமுடியா முள்ளானேன்
உணர்ந்து எழுகையில் உள்ளங்கையை எடுத்துவிட்டாயே!

பிரிகையில்
உள்ளமும் உணர்ச்சியும் அழுவது காதல்
உள்ளமும் இதயமும் அழுவது தான் நட்பு
இதயத்தின் அழுகையால் என் உள்ளமே மிதந்தது!

உலகளவில் பெற்றவெற்றியை விட-மங்கையர்
மனதளவில் பெற்றவெற்றியே உண்மையான வெற்றி
உன் மனதில்-எந்நாளில்
வெற்றித்திருமகனாவேனோ!

இருபதில்லை இருந்தகாலம்
காண்பதிற்கு உண்டு வருங்காலம்-என்னை
வாழவைப்பதே இக்காலம்-உந்தன்
வருகையால் ஆனது பொற்காலம்

வழித்தடமாய் அமைய
அழைக்கவில்லை-நல்ல
வழிகாட்டியாய் அமையவே
அழைக்கிறேன்!

செடிக்குத் தெரியும்
மலரும் பூக்கள் மடியும் என்று
மலராமல் இருபதில்லை
மனதிற்கு தெரியும்
மறந்து விடுவோம் என்று
நினைக்காமல் இருபதில்லை

திட்டியபோது மகிழ்ந்த மனம்
குற்ற உணர்ச்சியில் அழுகின்றது
அழுகைகையை துடைக்க வர வேண்டாம்
அழகு முகத்தால் அன்புப்புன்னகை மட்டும் போதும்

புன்னகையை எதிர்பார்க்கும்
பிரியமான தோழன்........................


செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment