Saturday, September 29, 2018

நல்லதே நினைப்போம்


நல்லதே நினைப்போம்
 
  தீபாவளி என்னும் திருநாளில் 
  பறவைகளின் நலனுக்காக
  வெடிச்சத்தம் கேலா தீபாவளி ஒருபுறம்
  சிவகாசியின் சில குடும்பம் வாழ
  இந்தியாவின் பல குடும்பத்தின் வெடிச்சத்தம் ஒருபுறம்
  அரசின் கட்டளைகள் ஆயிரம்
  மாசுக்கட்டுப்பாட்டின் கட்டுப்பாடு,
  காவல்துறையின் கண்டனம் எல்லாம் ஒருபுறம்
 
  பட்டாசு வாங்க அடம்பிடிக்கும் குழந்தை,
  புத்தாடை போட மனம் துடிக்கும் ம்னைவி, 
  பொன்நகைக்காக புன்னகை காட்டும் தங்கை,
  நீண்ட நாள் கணவுகளை எல்லாம் 
  நிறைவேற்றத் துடிக்கும் தாய்தந்தை, 
  அனைத்து ஆசையையும் நிறைவேற்றுவோமா?-என்ற
  என்னதில் கொண்டாடும் தீபாவளி ஒருபுறம் 
 
  விடியாக்காலையில் எண்ணையுடன்
  எழுப்பும் பாட்டி
  புத்தாடை மற்றும் நோம்பிக்காசுடன்
  சாமிஅறையில் இருக்கும் தாத்தா
  கட்டுக்கட்டாய் பட்டாசும், சுருள் சுருளாய் சரவெடியும் 
  வெடிக்கச்சொல்லி வாசலருகே காத்துக்கிடக்கும் மாமன்மார்கள்
  பலவகை பலகாரங்களை - ஒரு 
  திணத்தில் செய்துமுடிக்கும் அத்தைமார்கள்
  அனைவரின் அன்பையும் 
  இரட்டிப்பாக்கும் தீபாவளி ஒருபுறம்   
 
  இத்தனை தீபாவளியையும் மனதில் 
  மட்டுமே நினைத்துக் கொண்டு
  SMS & E-Mailகளை பரக்கவிட்டு
  டிவி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு
  அலைபேசியில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளும்
  தமிழ் இனங்களுக்கு-என்
  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..........................
 
 
  செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment