Saturday, September 29, 2018

சீர்வரிசை

சீர்வரிசை


நீ
"ஆழகாய் இருக்கிறாய்"
என்ற வரிகளுடன் நிறுத்த
நினைத்த என் எழுதுகோலுக்கு
மனதின் முற்றுப்புள்ளி
தமிழ்நாட்டின் அழகைக்கான-என
ஒருமாத பட்டியிலை

ஒருநொடிப்பொழுதில்
கிழித்தெரிய வைத்தாய்-உந்தன்
ஒரு பார்வையால்............
ஈரேழு ஜென்மத்தின்
புண்ணியத்தை பெறுகிறான்
ஒருவன்-நீ மணமுடிக்க
சம்மதித்த தருவாயில்
எச்சரிக்க மணி
தந்துவிடு-அன்பெனும்
கடலில் விழப்போகிறீர்கள்-என்று
உந்தன் மறுதாய்தந்தையருக்கு

பொருளில் தந்தசொத்துகள்
மறைந்துவிடும் நொடிப்பொழுதில்
மனதில் முறைத்த முத்துக்களை
தருகிறேன் சீர்வரிசையாக-இந்த
சகோதரனின் சந்தோஷமான
காலங்களில் பங்குபெற்றதற்காக
மழைத்துளிகளில் ஒரு பன த்துளி
உந்தன் மனதின் மேல்
ஏற்றுக் கொள்வாயா?


                                          செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment