Saturday, September 29, 2018

ஏக்கம்

ஏக்கம்


வாயடைத்து காதடைத்து  
சம்பாதித்த காசை  
கண்மூடி,கைமூடி  
புகைவிட்டாய் மகனே  
உனைநினைத்து ஏங்குகிறேன்  

 
உணவுஉண்டால் தீருமோ என எண்ணி  
சேமித்த காசை  
குடிகுடியை கெடுக்கும் என எண்ணி  
குடித்தாய் மகனே  
உனைநினைத்து ஏங்குகிறேன்  

 
உதிரத்தை பாலாக்கி விய்ர்வையை காசாக்கி  
கொடுத்ததை  
பொகிலையை பொடியாக்கி மாத்திரையை போதையாக்கி
அடிமையானாய் மகனே  
உனைநினைத்து ஏங்குகிறேன்  

 
நாளைய பாரதம் இளைஞர்கள் கையில்  
இளைஞர்கள் யார் கையில்  
என் ஏங்குகிறேன் மகனே  
உனைநினைத்து ஏங்குகிறேன்  

 

 
                                              செ.தினேஷ்குமார்   

No comments:

Post a Comment