Saturday, September 29, 2018

காதல் கதை

காதல் கதை


காதல் என்பது
சூரியஒளியில் பொருளைத்தொலைத்து
நிலவொளியில் தேடிய கதை!
சாதிக்க நினைத்து
பகற்கனவில் சாதித்த கதை!
பாசக்கயிற்றால் தற்கொலை
செய்வதன் உண்மைக் கதை!

காதல் என்பது
இரு உருவங்கள் அமர்ந்து பேசும் கடற்கரை!
இரு உடலை இணைத்து உயிரை எடுக்கும் மணவறை!
இரு மனங்களில் என்றும் அழியாக்கறை!
அதிக ஈர்ப்பால், பாசத்தால் வலுக்கும் பாறை!
மொத்தத்தில் உணர்ச்சிகளை வெளியேற்றும் கழிவறை!


                                                                         செ.தினேஷ்குமார் 

No comments:

Post a Comment