Saturday, September 29, 2018

முதல் இரவு


முதல் இரவு
   
  பூஞ்சோலைத் தென்றலே
  சீறிவந்த காளையை

இதழ்களில் தேன் பருகவைத்தாயே!

 

சுரங்களின் சங்கீதமே

கூடிவந்த ஓலையில்-என்னை

பாவைபாட வைத்தாயே!

 

பனியின் இமையமே

மாலைசாயும் வேலையில்-என்னை

மெய்மறக்க வைத்தாயே!

 

மின்னும் பொற்சிலையே

கருநீள கூந்தலில்-என்னை

மலர்நீக்க வைத்தாயே!

 

தூங்கும் விளக்குகள் விழிக்கும் முன்

மூடிய கதவுகள் திறக்கும் முன்-நீயென்னை

அம்பிலிருந்து புறப்படும் வில்லாக்கு.

 



செ.தினேஷ்குமார்

No comments:

Post a Comment