என் அமுச்சி.................. | ||
ஆயிரம் ஆயிரமாய் | ||
சம்பளம் வாங்கினாலும் - நீ | ||
கொட்டுத்த நோம்பிக்காசின் | ||
சந்தோஷம் இல்லையே! | ||
பலவகை சாப்பாடு, | ||
நேரம் ஒருவகையானாலும் - நீ | ||
ஊட்டிய நாம்பல் சோற்றின் | ||
சுவை இல்லையே! | ||
பஞ்சு மெத்தையில் | ||
ஏசிக்காற்றில் படுத்தாலும் - உன் | ||
மடியில் நிலவைப்பார்த்து தூங்கிய | ||
தூக்கம் இல்லையே! | ||
ஆயிரம் முறை சீவினாலும் - உன் | ||
கைகளால் தூக்கிவாரி சீவிய தலையும் | ||
நடு நெற்றியில் வைத்த பவுடர் பொட்டும் | ||
அழியவில்லை என் மனதில்! | ||
வசதிகள் ஆயிரம் வந்தாலும் | ||
எண்னெய் குளியலுக்காக - நீ | ||
துரத்திப் பிடித்த ஓட்டம் | ||
ஓயவில்லை என் மனதில்! | ||
ஆடிக் ாக விட்டத்தில் கட்டிய | ||
தூறியும், போகிக்காக முகப்பில் | ||
சொருகிய காப்பும் | ||
அவிழவில்லை என் மனதில்! | ||
உறங்கச் சொல்லிய கதையும் | ||
உறக்கக கூவிய பாட்டும் கேலேனோ? | ||
கன்னத்திலிட்ட வலிக்காத அடியும் | ||
செல்லமாய் கொடுத்த முத்தமும் பெறுவேனோ? | ||
பேருந்தின் சன்னலோரத்தில் - உன் | ||
மடியில் அமர்ந்து எண்ணிய மரங்கள் | ||
நான் படிக்க புத்தகப்பையை - நீ | ||
சுமந்த காலங்களைக் காண்பே ோ? | ||
மருத்துவமணையில் படுத்திருந்த உன்னை | ||
பார்க்கவந்த என்னிடம் - நீ | ||
கேட்டவார்த்தைகள் "நல்லாயிருக்கையா சாமி" | ||
இதை நான் மறவேனோ? | ||
மணித்துளிகளின் குறைவு | ||
நாட்களின் கழிவு | ||
உன்னைககாண வரும் பொழுது | ||
அதுதான் "நல்வரவு" | ||
செ.தினேஷ்குமார் |
MY OWN TAMIL KAVITHAIGAL. ITS REACTED AND RELATED WITH MY OWN FEELINGS AND LIFE STYLES......
Saturday, September 29, 2018
என் அமுச்சி..................
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment